வியாழன் கோவில் காணப்படும் ராட்சத சிவப்பு புள்ளி பற்றிய புதிய தகவல்களை விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர்.
வியாழன் கோளில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக ராட்சத சிவப்பு புள்ளி காணப்படுகிறது. இது பூமியை விட பெரியதாக உள்ளது. புயல் காரணமாக சுழல் போன்ற இந்த புள்ளி ஏற்பட்டிருக்கலாம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் தோற்றம் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 1879 ஆம் ஆண்டு, 24233 மைல் பரப்பளவில் அறியப்பட்ட இந்த சூழல், படிப்படியாக அளவு குறைந்து, தற்போது 8,700 மைல் விட்டத்துடன் காணப்படுகிறது. மேலும், முதலில் நீள்வட்ட வடிவில் இருந்த இந்த சுழல், தற்போது வட்ட வடிவத்திற்கு மாறி உள்ளது. அத்துடன், முதலில் இருந்ததை விட தற்போது குறைவான ஆழத்துடன், மெல்லிதாக மாறி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.