தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதும் 30 இடங்களில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் பயங்கரவாதிகள் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்புடன் இந்தியாவில் உள்ள சில மாபியா கும்பல்கள் தொடர்பில் உள்ளார்கள். இவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு பயங்கரவாத கும்பலுக்கு உதவி செய்து வருகின்றனர். இது தொடர்பாக அவ்வப்போது என். ஐ. ஏ. அதிகாரிகள் சந்தேகப்பட்ட நபர்களுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டும், அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பயன்படும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று சந்தேகப்படும் பிரபல ரவுடிகளுக்கு சொந்தமான இடங்களில் என். ஐ. ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் சண்டிகரில் உள்ள 30 இடங்களில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.














