நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.நாகை துறை முகத்தில் இருந்து இலங்கை துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் அக்டோபர் பத்தாம் தேதி முதல் போக்குவரத்திற்கு தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதனை அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு செய்தார்.இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட அங்கு துறைமுகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் நேற்று நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இதனால் அங்கு பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் பயணிகள் சோதனை கருவி, மருத்துவ பரிசோதனை கருவி, பயணிகள் உடைமைகள் சோதனை கருவி, உடைமைகளை பாதுகாப்புடன் வைப்பதென அனைத்திற்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுகத்தில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராவில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு 18% ஜிஎஸ்டி வரிகளுடன் ரூபாய் 6500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் பயணிக்கும் பயணி ஒருவர் சுமார் 50 கிலோ எடையுள்ள பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். மேலும் இலங்கை செல்வதற்கான பாஸ்போர்ட், விசா ஆகியவை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இதற்கான சோதனை ஓட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் 14 அதிகாரிகள் கப்பலில் பயணம் செய்துள்ளனர்.