நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்காக கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்காக கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதனை டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிய வைத்துள்ளார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாடுகள் இடையேயான கப்பல் பயணத்தின் மூலம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான உறவு புதியதாக ஒரு அத்தியாயத்தை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இவை இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.