நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 2018-ம் ஆண்டு நாகாலாந்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. அங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் இம்முறை ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இடதுசாரிகளின் கோட்டை என ஆண்டாண்டு காலமாக அறியப்பட்ட திரிபுராவில் இப்போது பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. காங்கிரஸார் செய்த பிழையால் திரிபுராவில் இடதுசாரிகள் வீழ்த்தப்பட்டு பாஜக ஆட்சி அமைந்தது.
இந்நிலையில் இந்த இரு மாநில தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.