நாமக்கல் முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் சரிவு

January 26, 2023

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் சரிந்துள்ளது. தமிழகத்தில் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி 550 காசாக இருந்த முட்டை விலை 9-ந் தேதி 565 காசாக உயர்ந்தது. இந்த புதிய விலை 20 நாட்கள் நீடித்தது. கடந்த 21-ந் தேதி 20 காசுகள் சரிந்து 545 காசாக […]

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை மேலும் 30 காசுகள் சரிந்துள்ளது.

தமிழகத்தில் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி 550 காசாக இருந்த முட்டை விலை 9-ந் தேதி 565 காசாக உயர்ந்தது. இந்த புதிய விலை 20 நாட்கள் நீடித்தது. கடந்த 21-ந் தேதி 20 காசுகள் சரிந்து 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறுகையில், நெக் நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 50 காசு குறைத்து விற்பனை செய்ய, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய குழு பரிந்துரை செய்கிறது. ஆனால் வியாபாரிகள் 85 காசுகள் குறைத்து 420 காசுக்கே கொள்முதல் செய்கின்றனர். மேலும் ஹைதராபாத் மற்றும் வட மாநிலங்களில் நுகர்வு சரிந்து, கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். அவற்றை கருத்தில் கொண்டு நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை 30 காசு குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu