அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் டிரம்பின் குடியரசு கட்சி குறைந்தபட்சம் 218 இடங்களை குறுகிய பெரும்பான்மையுடன் வென்றது.
இந்நிலையில், சபாநாயகர் நான்சி பெலோசி, பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளார். அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, ஜனநாயகக் கட்சிக் கூட்டத்திற்கு புதிய தலைமுறை தலைமை தாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது அடுத்த காங்கிரசில் நான் தலைமைப் பதவியை நாட மாட்டேன்" என்றார். இதனை தொடர்ந்து குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்தி பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்டுகிறது.