கர்நாடகாவின் மாநில பால் நிறுவனமாக நந்தினி பால் உள்ளது. நந்தினி பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த உள்ளதாக கர்நாடகா அமைச்சரவை அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, “இந்தியாவின் பிற மாநிலங்களை விட கர்நாடகாவில் குறைந்த விலையிலேயே பால் விற்கப்பட்ட வருகிறது. தற்போது, பால் உற்பத்தியாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல், டோன்ட் பால் 42 ரூபாய்க்கு விற்கப்படும். கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், இந்தியாவின் பிற மாநிலங்களில் 56 ரூபாய்க்கு விற்கப்படும் பால், கர்நாடகாவில் குறைந்த விலையிலேயே விற்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும், இந்த விலை உயர்வு, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பலன் தரும் நோக்கில் கொண்டுவரப்படுவதாக கூறியுள்ளார்.














