ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை வெற்றிகரமாக வகிப்பதற்கு இந்தியா முழு ஆதரவை பிரேசிலுக்கு அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை பிரேசில் அதிபர் லூயிஸ் இன்சியோ லுலா தா சில்வா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதில் மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்த விவரங்கள் பகிரப்பட்டுக் கொண்டது. மேலும் இஸ்ரேல் ஹமாஸ் மோதலால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை வகிப்பதற்கு பிரேசிலுக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கும் எனவும், பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது என நாங்கள் ஒப்புகொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.