சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்

December 18, 2024

கடந்த ஜூன் மாதம், எட்டு நாள் பணிக்காக போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ISS-க்கு பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ், ஸ்டார்லைனர் கலத்தில் ஏற்பட்ட உந்துவிசை தொடர்பான கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவது தாமதமானது. வரும் 2025 பிப்ரவரியில் அவர்கள் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தாமதம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் ISS-க்கு வந்த ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மூலமாக, இந்த இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டிருந்தது. […]

கடந்த ஜூன் மாதம், எட்டு நாள் பணிக்காக போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ISS-க்கு பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ், ஸ்டார்லைனர் கலத்தில் ஏற்பட்ட உந்துவிசை தொடர்பான கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவது தாமதமானது. வரும் 2025 பிப்ரவரியில் அவர்கள் திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தாமதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் ISS-க்கு வந்த ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மூலமாக, இந்த இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், க்ரூ-10 விண்கலத்தின் ஏவுதல் மார்ச் மாதம் வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது. அதனால், மேலும் ஒரு மாதத்துக்கு அவர்களின் பூமி வருகை தாமதமாகியுள்ளது. அதன் படி, வெறும் எட்டு நாட்கள் பணிக்காக சென்றவர்கள், இப்போது ஒன்பது மாதங்கள் விண்வெளியில் தங்கியிருக்க நேரிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu