ஓரியன் விண்கலம், நிலவைச் சுற்றி பறக்க உள்ள நிலையில், பவர் கண்டிஷனிங்கில் கோளாறு ஏற்பட்டுள்ளது

December 5, 2022

நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், இன்று, நிலவைச் சுற்றி பறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்கலத்தின் பவர் கண்டிஷனிங் விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, இன்று அதிகாலை 12:11 மணி அளவில், ஓரியன் விண்கலத்தின் பவர் கண்டிஷனிங் டிஸ்ட்ரிபியூஷன் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த கோளாறால் விண்கலத்தின் முக்கிய பாகங்களுக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை எனவும், விண்கலத்தின் பயணம் மற்றும் தொடர்பு இணைப்புகளை இது பாதிக்காது எனவும் நாசா தெரிவித்துள்ளது. […]

நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், இன்று, நிலவைச் சுற்றி பறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்கலத்தின் பவர் கண்டிஷனிங் விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி, இன்று அதிகாலை 12:11 மணி அளவில், ஓரியன் விண்கலத்தின் பவர் கண்டிஷனிங் டிஸ்ட்ரிபியூஷன் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த கோளாறால் விண்கலத்தின் முக்கிய பாகங்களுக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை எனவும், விண்கலத்தின் பயணம் மற்றும் தொடர்பு இணைப்புகளை இது பாதிக்காது எனவும் நாசா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று இரவு 7:30 மணி முதல், நிலவை சுற்றிப் பறக்கும் ஓரியன் விண்கலத்தின் காணொளி, நாசாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. சுமார் 127 கிலோமீட்டர் தொலைவில் நிலவுக்கு நெருக்கமாக ஓரியன் விண்கலம் பறக்க உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu