ஆர்டெமிஸ் 1 - பூமிக்கு திரும்பும் பயணத்தை தொடங்கியது

December 2, 2022

ஆர்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம், நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், கடந்த சில தினங்களாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்தது. இன்று காலை பூமிக்கு திரும்பும் பயணத்தை தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:23 மணிக்கு, ஓரியன் விண்கலத்தின் மோட்டார் இயக்கப்பட்டது. சுமார் 45 வினாடிகளுக்கு இயக்கப்பட்ட இந்த மோட்டார், விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து வெளியேற்றி வருகிறது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி, நிலவிலிருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் ஓரியன் விண்கலம் பறக்கும் […]

ஆர்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம், நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், கடந்த சில தினங்களாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்தது. இன்று காலை பூமிக்கு திரும்பும் பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:23 மணிக்கு, ஓரியன் விண்கலத்தின் மோட்டார் இயக்கப்பட்டது. சுமார் 45 வினாடிகளுக்கு இயக்கப்பட்ட இந்த மோட்டார், விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து வெளியேற்றி வருகிறது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி, நிலவிலிருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் ஓரியன் விண்கலம் பறக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பின்னர், டிசம்பர் 11ஆம் தேதி, பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்வெளியில், ஓரியன் விண்கலத்தின் இருப்பை அறிய உதவும் நட்சத்திர பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu