நாசாவின் ஆர்ட்டெமிஸ் மிஷனில் பின்னடைவு - இன்றைய ராக்கெட் ஏவும் திட்டம் நிறுத்தம்

August 30, 2022

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் என்ற திட்டத்தில் நாசா பணியாற்றி வருகிறது. அதற்காக, இன்று, நிலவை ஆராய்ச்சி செய்ய ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் என்ற ராக்கெட் அனுப்பப்பட இருந்தது. இந்நிலையில், தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்கள் காரணமாக ராக்கெட் ஏவும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு, நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, முன்னதாக நிலவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள, ஆர்ட்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை ஏவ திட்டமிட்டு இருந்தது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்திய நேரப்படி, இன்று […]

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் என்ற திட்டத்தில் நாசா பணியாற்றி வருகிறது. அதற்காக, இன்று, நிலவை ஆராய்ச்சி செய்ய ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் என்ற ராக்கெட் அனுப்பப்பட இருந்தது. இந்நிலையில், தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்கள் காரணமாக ராக்கெட் ஏவும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு, நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, முன்னதாக நிலவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள, ஆர்ட்டெமிஸ்-1 என்ற ராக்கெட்டை ஏவ திட்டமிட்டு இருந்தது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்திய நேரப்படி, இன்று மாலை 6 மணியளவில் புறப்பட இருந்த ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட்டில், எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால், ராக்கெட் ஏவும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்-டவுன் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. பின்னர், ஆர்ட்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைளை பற்றி விவாதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ,நாசாவின் ஆர்ட்டெமிஸ் மிஷனில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, மோசமான வானிலை காரணமாக, திரவ ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிரப்பும் பணியிலும் சுணக்கம் ஏற்பட்டது. பின்னர், பிரதான ஹைட்ரஜன் நிரப்பு அலகில் கசிவு காணப்பட்டது. அதனைச் சரி செய்து, ராக்கெட் ஏவப்பட தயாரான நிலையில், வேறு சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால், திட்டம் நிறுத்தப்பட்டது. கோளாறுகள் சரி செய்யப்பட்டு செப்டம்பர் 2 அல்லது 5 ஆம் தேதிகளில் ராக்கெட் மீண்டும் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ற ராக்கெட் ஏவும் நிகழ்வைக் காண பொதுமக்கள் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் வருவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu