நாசா விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுத்த “பசிபிக் பெருங்கடலில் மறையும் நிலவு” புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஹவாய் அருகே வெப்பமண்டல புயல் ஹோனை புகைப்படம் எடுக்க முயன்ற டொமினிக், எதிர்பாராத விதமாக நிலவு மறையும் காட்சியும் இணைந்துள்ளதை கவனித்துள்ளார். மேகங்கள் மற்றும் பூமியின் வளிமண்டலத்தால் உருவாக்கப்பட்ட நீல நிற சாயல்களுடன் கூடிய இந்தப் புகைப்படம் மிகவும் அழகாக உள்ளது. 400mm, ISO 500, 1/20000s ஷட்டர் வேகம் மற்றும் f2.8 ஆகிய தொழில்நுட்ப விவரங்களைக் கொண்டு இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் 400,000 பார்வைகளையும் 5,000 விருப்பங்களையும் பெற்றுள்ளது. இதற்கு முன், பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே ஒரு பிறை வடிவ நிலவை காட்டும் மற்றொரு அழகான புகைப்படத்தை டொமினிக் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.