கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் விமானங்கள் - நாசா மற்றும் போயிங் நிறுவனங்கள் இணைந்து வடிவமைக்க ஒப்பந்தம்

January 19, 2023

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், குறைந்த கார்பன் வெளியேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, புதிய வகை விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தத்தை, நாசா, போயிங் விமான நிறுவனத்திடம் வழங்கி உள்ளது. இதற்காக, அடுத்த 7 வருடங்களில், 425 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாசா முதலீடு செய்ய உள்ளது. நாசா அளிக்கும் இந்த நிதி மூலம், போயிங் நிறுவனம், விமானங்களை வடிவமைத்து, உருவாக்கி, பரிசோதனை செய்ய உள்ளது. தற்போதைய விமானங்கள் பாரம்பரிய முறைப்படி வடிவமைக்கப்படுகின்றன. இதனை, வரும் 2030 […]

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், குறைந்த கார்பன் வெளியேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, புதிய வகை விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தத்தை, நாசா, போயிங் விமான நிறுவனத்திடம் வழங்கி உள்ளது. இதற்காக, அடுத்த 7 வருடங்களில், 425 மில்லியன் அமெரிக்க டாலர்களை நாசா முதலீடு செய்ய உள்ளது. நாசா அளிக்கும் இந்த நிதி மூலம், போயிங் நிறுவனம், விமானங்களை வடிவமைத்து, உருவாக்கி, பரிசோதனை செய்ய உள்ளது.

தற்போதைய விமானங்கள் பாரம்பரிய முறைப்படி வடிவமைக்கப்படுகின்றன. இதனை, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் மாற்றியமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இதனால், 2050 ஆம் ஆண்டுக்குள் 'ஜீரோ கார்பன் வெளியேற்றம்' என்ற இலக்கு அடையப்படும் என்று தெரிவித்துள்ளது.

விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில், இந்த திட்டத்தில், விமானங்களின் இறக்கைகளை நீளமானதாகவும் ஒல்லியானதாகவும் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் இலகுவாக பறந்து, எரிபொருள் தேவை குறைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதை நோக்கி போயிங் நிறுவனம் செயல்பாடுகளைத் துவங்க உள்ளதாக, நாசாவின் துணை நிர்வாகி பாப் பியர்ஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu