நாசா வெளியிட்ட நெக்லஸ் நெபுலா புகைப்படத்துக்கு அதிக வரவேற்பு

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஆச்சரிய புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, நெக்லஸ் நெபுலா என்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. நாசாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்துக்கு அதிக விருப்பங்கள் பதிவாகி வருகின்றன. ‘விண்வெளி ஆபரணம்’ (Cosmic Jewel) என்ற பெயரில் நெக்லஸ் நெபுலா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஏற்பட்ட இந்த நிகழ்வை ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா படம் பிடித்துள்ளது. “இத்தகைய நிகழ்வு, சூரியன் போன்ற […]

விண்வெளியில் எடுக்கப்பட்ட ஆச்சரிய புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, நெக்லஸ் நெபுலா என்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. நாசாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்துக்கு அதிக விருப்பங்கள் பதிவாகி வருகின்றன.

‘விண்வெளி ஆபரணம்’ (Cosmic Jewel) என்ற பெயரில் நெக்லஸ் நெபுலா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 15,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஏற்பட்ட இந்த நிகழ்வை ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா படம் பிடித்துள்ளது. “இத்தகைய நிகழ்வு, சூரியன் போன்ற பிரகாசமான நட்சத்திரங்கள் அருகருகே சுற்றி வருவதால் ஏற்படுகிறது” என நாசா விளக்கம் அளித்துள்ளது. “நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் அடர்த்தியான வாயுக்கள் மற்றும் தூசி படலங்கள் நட்சத்திர ஒளியில் பிரகாசமாக மின்னுகின்றன. இதனால் ஜொலிக்கும் வைர நெக்லஸ் போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது” என்று நாசா கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu