டெல்லி - பீஜிங் தூரத்தை விட மிகக் குறைவான தூரத்தில் பூமியை நெருங்கிய விண்கல்

January 27, 2023

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5:57 மணி அளவில், பூமியிலிருந்து சில ஆயிரம் மைல் தொலைவில் சிறிய விண்கல் ஒன்று பூமியை கடந்து சென்றது. 2023 BU என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையில், பூமியின் மேற்பரப்பிலிருந்து வெறும் 3600 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தது. இது பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் சுற்றுவட்ட பாதைக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கல்லானது, டெல்லி - பீஜிங் இடையிலான தூரத்தை விட குறைவான தூரத்தில் பூமியின் மேற்பரப்பில் பறந்தது […]

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5:57 மணி அளவில், பூமியிலிருந்து சில ஆயிரம் மைல் தொலைவில் சிறிய விண்கல் ஒன்று பூமியை கடந்து சென்றது. 2023 BU என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையில், பூமியின் மேற்பரப்பிலிருந்து வெறும் 3600 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தது. இது பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் சுற்றுவட்ட பாதைக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கல்லானது, டெல்லி - பீஜிங் இடையிலான தூரத்தை விட குறைவான தூரத்தில் பூமியின் மேற்பரப்பில் பறந்தது குறிப்பிடத்தக்கது.

2023 BU விண்கல், 11.5 முதல் 28 அடிவரை நீல அகலம் உடையதாகும். இதனால் இன்றைய தினம் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒருவேளை இது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைய நேரிட்டால், இது முற்றிலுமாக எரிந்து பூமியின் தரைப்பகுதியை எட்டுவதற்குள் சாம்பல் ஆகிவிடும் என்று கருதப்படுகிறது. ஒருவேளை இதைவிட பெரிய அளவிலான விண்கல் பூமியை நெருங்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 21 ஆம் தேதியன்று கண்டறியப்பட்ட இந்த விண்கல் குறித்து நாசா அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu