செவ்வாய் கிரகத்துக்கு சென்ற சிறிய ரக ஹெலிகாப்டரை தொடர்பு கொண்ட நாசா

July 1, 2023

செவ்வாய் கிரகத்துக்கு சென்ற சிறிய ரக ஹெலிகாப்டரை நாசா தொடர்பு கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா கடந்த ஏப்ரல் மாதம் 26- ந் தேதி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் நாசாவுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் 63 நாட்களுக்குப் பிறகு அந்த ஹெலிகாப்டரில் இருந்து மீண்டும் […]

செவ்வாய் கிரகத்துக்கு சென்ற சிறிய ரக ஹெலிகாப்டரை நாசா தொடர்பு கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாசா கடந்த ஏப்ரல் மாதம் 26- ந் தேதி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் நாசாவுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர்.

இந்நிலையில் 63 நாட்களுக்குப் பிறகு அந்த ஹெலிகாப்டரில் இருந்து மீண்டும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அந்த ஹெலிகாப்டரை அனுப்பிய குழுவின் தலைவர் ஜோஸ்வா ஆண்டர்சன் கூறுகையில், இது தகவல் தொடர்பை இழந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தகவமைத்துக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டது. தற்போது மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu