நாசாவின் மோதலுக்குப் பிறகு முற்றிலும் வேறு வடிவமாக மாறிய விண்கல் - விஞ்ஞானிகள் தகவல்

February 28, 2024

கடந்த 2022 செப்டம்பரில், நாசா, டார்ட் என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி, பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள டைமார்பஸ் என்ற விண்கல் மீது, நாசாவின் விண்கலம் மோதச் செய்யப்பட்டது. இதனால், விண்கல்லின் சுற்றுவட்ட பாதையில் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்ததாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது, இந்த விண்கல் முற்றிலும் வேறு வடிவமாக மாறி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் பூமிக்கு ஆபத்தாக வரும் விண்கற்களை பாதை மாற்றச் செய்யும் ஆராய்ச்சியின் பரிசோதனை டார்ட் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இது வெற்றியடைந்ததாக […]

கடந்த 2022 செப்டம்பரில், நாசா, டார்ட் என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி, பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள டைமார்பஸ் என்ற விண்கல் மீது, நாசாவின் விண்கலம் மோதச் செய்யப்பட்டது. இதனால், விண்கல்லின் சுற்றுவட்ட பாதையில் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்ததாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது, இந்த விண்கல் முற்றிலும் வேறு வடிவமாக மாறி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் பூமிக்கு ஆபத்தாக வரும் விண்கற்களை பாதை மாற்றச் செய்யும் ஆராய்ச்சியின் பரிசோதனை டார்ட் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இது வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கல் மீது மோதல் விளைவு நிகழ்த்தப்பட்டதில், அதன் பாதை மாறியது உறுதியான நிலையில், தற்போது விண்கல்லின் வடிவம் மாற்றமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. கணினி மென்பொருள் உதவியுடன் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கை நேச்சர் அஸ்ட்ரானமி என்ற ஆய்விதழில் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu