கடந்த 2022 செப்டம்பரில் டைமார்பஸ் விண்கல்லை டார்ட் திட்டத்தின் மூலம் நாசா மோதியது. அப்போது சிதறிய விண்கல்லின் துகள்கள் செவ்வாய் கிரகத்தில் மழையாக பொழியலாம் என ஐரோப்பிய விண்வெளி மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் விண்கற்களின் பாதைகளை மாற்றும் ஆராய்ச்சியாக, டார்ட் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது 530 அடி விட்டம் கொண்ட டைமார்பஸ் விண்கல் மீது நாசாவின் விண்கலம் வேண்டுமென்றே மோதப்பட்டது. இதன் விளைவாக, விண்கல் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் நிகழ்ந்ததுடன், அதன் உருவத்திலும் மாற்றம் நிகழ்ந்ததாக நாசா உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், விண்கல்லில் இருந்து சிதறிய பாகங்கள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நுழைய உள்ளதாகவும், அப்போது சில பாகங்கள் மழை போல பொழியலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால், செவ்வாய் கிரகத்தில் பெரிய அளவிலான கிரேட்டர்கள் உருவாகலாம் மற்றும் செவ்வாய் கிரக மணற்பரப்பில் மாற்றங்கள் நிகழலாம் என கருதப்படுகிறது.














