விண்வெளி ஆய்வுகளுக்காக பாம்பு போன்ற ரோபோ ஒன்றை நாசா வடிவமைத்து வருகிறது. பல்வேறு தன்மையுடைய மேற்பரப்புக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள, இந்த ரோபோ வசதியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், வேறு கோள்களில் உயிர்கள் உள்ளதா என்பதை அறியவும் இந்த ரோபோ பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த ரோபோ, சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான Enceladus ஐ ஆய்வு செய்ய முதன்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலவு, பனிக்கட்டிகளால் ஆனதாக சொல்லப்படுகிறது. எனவே, இங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பகுதியாகவே, இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. EELS - Exobiology Extant Life Surveyor என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் பாம்பு போன்ற வடிவம் காரணமாக, அசாதாரண தரைப் பரப்புகளிலும் ஆய்வு செய்ய முடியும் என சொல்லப்பட்டுள்ளது