கடந்த செப்டம்பர் மாதத்தில் பென்னு சிறு கோளில் இருந்து விண்கல் மாதிரிகள் பூமியை வந்தடைந்தன. ஆனால், இந்த மாதிரிகளின் ஒரு பகுதி பெட்டகத்துக்குள்ளேயே தேங்கியது. பெட்டகத்தை திறக்க முடியாமல் அந்த மாதிரிகளை பற்றிய கூடுதல் விவரங்களை அறிய முடியவில்லை. இந்த நிலையில், பல மாத போராட்டங்களுக்குப் பிறகு, ஒரு வழியாக, நாசா பெட்டகத்தை திறந்துள்ளது. அதில் இருந்த விண்கல் மாதிரிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு பெட்டகம் திறக்கப்பட்டு விண்கல் மாதிரிகள் கிடைத்துள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த பெட்டகத்தில் இருந்து கிடைத்துள்ள மாதிரிகள் சுமார் ஒரு சென்டிமீட்டர் அளவுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பெட்டகம் திறக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, பூமி உருவாவதற்கான முக்கிய கூறுகள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.