சூரிய குடும்பத்துக்கு வெளியே பல்வேறு கோள்கள் உள்ளன. அவற்றில், கிட்டத்தட்ட 17 புறக்கோள்களில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த கோள்களில் அமைந்துள்ள பனிப் படலத்துக்கு அடியில் அல்லது பாறை படத்துக்கு அடியில் தண்ணீர் இருக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.
வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் நிலவுகளில் அதிகமான பனி உள்ளது. இவற்றுக்கு அடியில் தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவற்றில் உயிர்கள் தோன்றுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவைத் தவிர, சூரிய குடும்பத்திற்கு வெளியில் அமைந்துள்ள 17 புறக்கோள்களில் உயிர்கள் தோன்றுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா விஞ்ஞானி லயன் குவிக் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக, Proxima Centauri b மற்றும் LHS1140 b ஆகியவற்றில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார்.