ஆஸ்திரேலிய உப்பு ஏரிகளில் இருந்து ஹைட்ரஜன் வெளியேறுகிறது - நாசா ஆய்வறிக்கை

September 11, 2023

ஆஸ்திரேலியாவில், இயற்கையாகவே வட்ட வடிவ உப்பு ஏரிகள் அமைந்துள்ளன. இவை ‘ஃபேரி சர்க்கிள்ஸ்’ (Fairy Circles) என அழைக்கப்படுகின்றன. இந்த ஏரிகளின் ஓரங்களில் இருந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறுவதாக, நாசா ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை, ஆஸ்திரேலியாவின் ‘ஃபேரி சர்க்கிள்ஸ்’புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள மூரா பகுதியில் இந்த ஏரிகள் காணப்படுகின்றன. பல 100 மீட்டர் விட்டத்துடன், வட்ட வடிவில், இந்த ஏரிகள் காணப்படுகின்றன. இதில் காணப்படும் உயிரினங்கள் மற்றும் நீரின் தன்மை […]

ஆஸ்திரேலியாவில், இயற்கையாகவே வட்ட வடிவ உப்பு ஏரிகள் அமைந்துள்ளன. இவை ‘ஃபேரி சர்க்கிள்ஸ்’ (Fairy Circles) என அழைக்கப்படுகின்றன. இந்த ஏரிகளின் ஓரங்களில் இருந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறுவதாக, நாசா ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை, ஆஸ்திரேலியாவின் ‘ஃபேரி சர்க்கிள்ஸ்’புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள மூரா பகுதியில் இந்த ஏரிகள் காணப்படுகின்றன. பல 100 மீட்டர் விட்டத்துடன், வட்ட வடிவில், இந்த ஏரிகள் காணப்படுகின்றன. இதில் காணப்படும் உயிரினங்கள் மற்றும் நீரின் தன்மை காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு, இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், ஹைட்ரஜன் வாயு அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டது.

கார்பனுக்கு மாற்றாக ஹைட்ரஜன் உற்பத்தியில் களம் இறங்க உலக நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. குறிப்பாக, எலக்ட்ரோலைசிஸ் முறையில் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரிக்கும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் உப்பு ஏரிகளில், இயற்கையாகவே ஹைட்ரஜன் வெளியேற்றப்படுகிறது. எனவே, இது கார்பனுக்கு மிகச் சிறந்த மாற்றாக அமையும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu