2023 ஜூலையே அதி வெப்பமான மாதம் - உறுதி செய்த நாசா

August 16, 2023

கடந்த 2023 ஜூலை மாதம் அதி வெப்பமான மாதமாக இருந்ததாக பல்வேறு தரப்புகள் தெரிவித்து இருந்தன. தற்போது, இந்த தகவலை நாசா உறுதி செய்துள்ளது. நாசாவின் Goddard Institute of Space Studies, அண்மையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த 2023 ஜூலை மாதத்தில், மற்ற ஜூலை மாதங்களை விட 0.24 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகியுள்ளது. கடந்த 1951 முதல் 1980 வரையில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலை மாதமும் பதிவாகும் சராசரி வெப்பநிலையை […]

கடந்த 2023 ஜூலை மாதம் அதி வெப்பமான மாதமாக இருந்ததாக பல்வேறு தரப்புகள் தெரிவித்து இருந்தன. தற்போது, இந்த தகவலை நாசா உறுதி செய்துள்ளது.

நாசாவின் Goddard Institute of Space Studies, அண்மையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த 2023 ஜூலை மாதத்தில், மற்ற ஜூலை மாதங்களை விட 0.24 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகியுள்ளது. கடந்த 1951 முதல் 1980 வரையில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலை மாதமும் பதிவாகும் சராசரி வெப்பநிலையை விட 1.18 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகியுள்ளது. அத்துடன், 2023 ஜூலைக்கு முன்னதாக, 1880 ஆம் ஆண்டு அதிக வெப்பம் பதிவாகியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் அதிக வெப்பம் பதிவானதற்கு, எல் நினோ விளைவு முக்கிய காரணம் என நாசா அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனாலும், மனிதனின் நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை உயர்வு ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்ததாக கூறியுள்ளது. அத்துடன், வெப்பநிலை உயர்வை ஏற்படுத்தும் மனிதர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உடனடி செயல்பாட்டில் இறங்க வேண்டும் என கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu