3 கேலக்ஸிகள் மோதல் - ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட ஆச்சரிய புகைப்படம்

February 23, 2023

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, 3 கேலக்ஸிகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றிணையப் போகும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. இவ்வாறு, கேலக்ஸி மோதல் ஏற்படுவது விண்வெளியில் வழக்கமாக நிகழும் சம்பவம் என்றாலும், 3 கேலக்ஸிகளும் புதிய நட்சத்திரங்களை உருவாக்கும் பருவத்தில் உள்ளது மிக அரிய நிகழ்வாக சொல்லப்படுகிறது. பூட்டஸ் விண்மீன் கூட்டத்தில் உள்ள 3 கேலக்ஸிகளும், ஒன்றிணைந்து மிகப்பெரிய ஒற்றை கேலக்ஸியாக உருவெடுக்கும் போது, இந்த கேலக்ஸிகளின் ஸ்பைரல் வடிவம் அழியும். தற்போது, 3 கேலக்ஸிகளும் ஈர்க்கப்பட்டு வரும் […]

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, 3 கேலக்ஸிகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒன்றிணையப் போகும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. இவ்வாறு, கேலக்ஸி மோதல் ஏற்படுவது விண்வெளியில் வழக்கமாக நிகழும் சம்பவம் என்றாலும், 3 கேலக்ஸிகளும் புதிய நட்சத்திரங்களை உருவாக்கும் பருவத்தில் உள்ளது மிக அரிய நிகழ்வாக சொல்லப்படுகிறது.

பூட்டஸ் விண்மீன் கூட்டத்தில் உள்ள 3 கேலக்ஸிகளும், ஒன்றிணைந்து மிகப்பெரிய ஒற்றை கேலக்ஸியாக உருவெடுக்கும் போது, இந்த கேலக்ஸிகளின் ஸ்பைரல் வடிவம் அழியும். தற்போது, 3 கேலக்ஸிகளும் ஈர்க்கப்பட்டு வரும் தருணத்தில், அவற்றின் வடிவம் சற்று மாற்றம் அடைந்துள்ளது. அதனை, ஹப்பிள் தொலைநோக்கி தெளிவாகப் படம் பிடித்துள்ளது. மேலும், இந்த கேலக்ஸிகள் ஒன்றிணையும் போது, அதிக அளவில் வாயுக்கள், தூசிப் படலங்கள் ஆகியவை வெளியேறும். அந்த வகையில், இந்த புகைப்படத்தில், அதிக ஒளி வெளியேறுவதும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், இந்த 3 கேலக்ஸிகளும் சுமார் 50,000 ஒளி ஆண்டுகள் ஒன்றோடு மற்றொன்று தள்ளி இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, இவற்றின் ஒன்றிணையும் நிகழ்வைக் காண, விண்வெளி ஆராய்ச்சிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இது சூரியனிலிருந்து 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu