செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவின் இன்ஜினியூட்டி ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட இந்த ஹெலிகாப்டர், தற்போது 11 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்துள்ளது. பூமியின் அளவுகளில் 11 கிலோ மீட்டர் என்பது சிறியதாக இருந்தாலும், செவ்வாய் கிரகத்தின் ஆய்வுகளை பொறுத்தவரை இது மிகவும் அதிகமாகும் என நாசா தெரிவித்துள்ளது..
கடந்த ஏப்ரல் 2ம் தேதி, இன்ஜினியூட்டி ஹெலிகாப்டரின் 49 வது பயணம் நிகழ்ந்தது. இதன் போது, அதிக உயரமாக பறந்தது மற்றும் அதிக வேகமாக பறந்தது ஆகிய 2 சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தன்னுடைய சாதனையையே, இன்ஜினியூட்டி ஹெலிகாப்டர் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. அன்றைய தினத்தில், 11 மீட்டர் உயரத்தில் இந்த ஹெலிகாப்டர் பறந்துள்ளது. மேலும், மணிக்கு 23.4 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்துள்ளது. இதன் மொத்த பயண நேரம் 142.7 வினாடிகள் ஆக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்தக் காலத்தில், இன்ஜினியூட்டி ஹெலிகாப்டர் 282 மீட்டர் தூரத்தை கடந்துள்ளது.