நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்த சிறிய விண்கல் - புகைப்படம் வெளியீடு

February 7, 2023

செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் உள்ள விண்கற்கள் குழுமத்தில் உள்ள விண்கல் ஒன்றை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை இந்த தொலைநோக்கி கண்டறிந்த விண்வெளி பொருட்களில் இதுவே மிகச் சிறியதாக கருதப்படுகிறது. இந்த விண்கல் 300 முதல் 650 அடி நீளம் உடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தனிப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. 100 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள, 100 மீட்டர் அளவிலான மிகச்சிறிய பொருள் ஒன்றை ஜேம்ஸ் […]

செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் உள்ள விண்கற்கள் குழுமத்தில் உள்ள விண்கல் ஒன்றை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை இந்த தொலைநோக்கி கண்டறிந்த விண்வெளி பொருட்களில் இதுவே மிகச் சிறியதாக கருதப்படுகிறது. இந்த விண்கல் 300 முதல் 650 அடி நீளம் உடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தனிப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

100 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள, 100 மீட்டர் அளவிலான மிகச்சிறிய பொருள் ஒன்றை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்து உள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது. தொலைநோக்கியின் அகச்சிவப்பு கருவியில் அளவு திருத்தம் மேற்கொண்ட போது இந்த விண்கல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu