நாசா பிளஸ் - புதிய பீட்டா வெப்சைட் தொடங்கிய நாசா

நாசா விண்வெளி மையம், நாசா என்ற பெயரில் வலைத்தளம் இயக்கி வருகிறது. தற்போது, புதிதாக, அதன் அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும் படி, பீட்டா வலைத்தளம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாசா பிளஸ் (NASA +) என்ற பெயரில் இந்த வலைத்தளம் இருக்கும். மேலும், புதிதாக கைப்பேசி செயலியும் இதே பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த தளத்தின் மூலம், விண்வெளி துறை தொடர்பான நாசாவின் அனைத்து திட்டங்கள், ஆராய்ச்சிகள், தகவல்கள் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன. தற்போதைய நிலையில், நாசா […]

நாசா விண்வெளி மையம், நாசா என்ற பெயரில் வலைத்தளம் இயக்கி வருகிறது. தற்போது, புதிதாக, அதன் அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும் படி, பீட்டா வலைத்தளம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாசா பிளஸ் (NASA +) என்ற பெயரில் இந்த வலைத்தளம் இருக்கும். மேலும், புதிதாக கைப்பேசி செயலியும் இதே பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த தளத்தின் மூலம், விண்வெளி துறை தொடர்பான நாசாவின் அனைத்து திட்டங்கள், ஆராய்ச்சிகள், தகவல்கள் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

தற்போதைய நிலையில், நாசா பிளஸ் தளம் சோதனை கட்டத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டுக்குள், நாசா பிளஸ் என்ற பெயரில், புதிய, விளம்பரம் இல்லாத, இலவச ஸ்ட்ரீமிங் சேவையை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாசாவின் இந்த அறிவிப்பு உலகளாவிய கவனத்தை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu