சூறாவளி சார்ந்த ஆய்வுகளுக்காக 2 சிறிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம் - நாசா அறிவிப்பு

சூறாவளி குறித்து கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், பிரத்தியேகமாக 2 சிறிய செயற்கை கோள்களை நாசா செலுத்தியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், ஒவ்வொரு மணி நேரமும், வெப்பமண்டல புயல்கள் குறித்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புயல், சூறாவளி உள்ளிட்ட வானிலை முன்னறிவிப்புகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும், செயற்கைக்கோள்கள் புயல் மற்றும் சூறாவளி சார்ந்த கண்காணிப்புகளை வழங்குகின்றன. ஆனால், இந்த புதிய செயற்கை […]

சூறாவளி குறித்து கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், பிரத்தியேகமாக 2 சிறிய செயற்கை கோள்களை நாசா செலுத்தியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், ஒவ்வொரு மணி நேரமும், வெப்பமண்டல புயல்கள் குறித்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புயல், சூறாவளி உள்ளிட்ட வானிலை முன்னறிவிப்புகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும், செயற்கைக்கோள்கள் புயல் மற்றும் சூறாவளி சார்ந்த கண்காணிப்புகளை வழங்குகின்றன. ஆனால், இந்த புதிய செயற்கை கோள்கள், ஒவ்வொரு மணி நேரத்திலும் இது சார்ந்த தகவல்களை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக, பூமியில் அடிக்கடி சூறாவளிகள் ஏற்படுகின்றன. இந்த சமயத்தில், இந்த செயற்கைக்கோளின் வரவு நன்மை அளிப்பதாக இருக்கும் என நாசா கூறியுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 321

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu