நாசா நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயண திட்டத்தில் பணியாற்றி வருகிறது. தற்போது, இந்தத் திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பொறியாளர் அமித் சத்ரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ரோபோட்டிக்ஸ் துறையில் பொறியியல் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மென்பொருள் துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவராக கூறப்பட்டுள்ளார்.
நிலவு முதல் செவ்வாய் வரையிலான பயணத்திட்டம், நிலவுக்கு பயணங்களை மேற்கொள்ளவும், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரை இறக்கவும் துணை புரிகிறது. எனவே, பல்வேறு திட்டங்களுக்கு நாசாவிற்கு துணையாக இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த முக்கியமான திட்டத்தில் இந்திய அமெரிக்கர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














