மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசாவின் முதல் முயற்சியான ஆர்டெமிஸ் 1 திட்டம், எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டெமிஸ் 1 மூலம் செலுத்தப்பட்ட ஓரியன் விண்கலம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. மின்கலத்தின் 4 சோலார் பேனல்களும் மிகச்சரியாக நிறுவப்பட்டு, கணிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எரிசக்தியை தருவதாக நாசா தெரிவித்துள்ளது. தற்போது, பூமியிலிருந்து 2 லட்சம் மைல்கள் தொலைவுக்கு அப்பால் ஓரியன் விண்கலம் சென்றடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று நிலவுக்கு 80 மைல்கள் தொலைவில் இது செல்லும். அதிலிருந்து சில நாட்களில், நிலவின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்து, டிசம்பர் 11ஆம் தேதி பூமிக்கு திரும்பி வரும் என நாசா தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், ஆர்டெமிஸ் இரண்டாம் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வருவர் எனவும், ஆர்டெமிஸ் மூன்றாம் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறக்கப்படுவர் எனவும் நாசா தெரிவித்துள்ளது.