நீர் நிலைகளில் காணப்படும் விஷத்தன்மையுடைய பாசிகளை கண்டறியும் போட்டி ஒன்றை நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட நீர்நிலைகளின் புகைப்படம் கொண்டு, பாசியின் பாதிப்பு குறித்து அறிய வேண்டும். 'டிக் டிக் ப்ளூம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த போட்டி, பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் உள்ள விஷத்தன்மை உடைய பாசியால், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, அதனை முறையாக கண்டறிவதன் மூலம், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்தப் போட்டியில், முதல் பரிசாக 12000 டாலர்களும், இரண்டாவது பரிசாக 9000 டாலர்களும், மூன்றாவது பரிசாக 6000 டாலர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 4 மற்றும் 5 ம் இடத்தில் உள்ளவர்களுக்கு 2000 மற்றும் 1000 டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவரும் தாங்கள் கண்டறிந்த பாசி குறித்து, ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என நாசா தெரிவித்துள்ளது.