நாசாவின் ஓரியன் விண்கலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியது

December 12, 2022

நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ஓரியன் விண்கலம், 26 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பின்னர், பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக தரையிறங்கியது. பூமியின் வளிமண்டலத்திற்குள் வேகமாக நுழைந்த ஓரியன் விண்கலம், அதன் பின்னர் பாராசூட் துணையுடன் மெதுவாக தரையிறக்கப்பட்டது. மெக்சிகோவின் குவாடலூப் தீவு பகுதியில் ஓரியன் தரையிறங்கியதும், அங்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் விண்கலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். நிலவின் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட இந்த விண்கலம், மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய பயணம் பரிசோதனைக்கானது […]

நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ஓரியன் விண்கலம், 26 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பின்னர், பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக தரையிறங்கியது. பூமியின் வளிமண்டலத்திற்குள் வேகமாக நுழைந்த ஓரியன் விண்கலம், அதன் பின்னர் பாராசூட் துணையுடன் மெதுவாக தரையிறக்கப்பட்டது. மெக்சிகோவின் குவாடலூப் தீவு பகுதியில் ஓரியன் தரையிறங்கியதும், அங்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் விண்கலத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

நிலவின் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட இந்த விண்கலம், மனிதர்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போதைய பயணம் பரிசோதனைக்கானது என்பதால், மனிதர்கள் அதில் பயணிக்கவில்லை. ஆனால், இந்த பரிசோதனை முழுமையாக வெற்றி அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், இந்த விண்வெளி பயணத்தில், ஓரியன் விண்கலம், நிலவில் உள்ள மனிதர்களின் காலடி உள்ளிட்ட முக்கியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu