விண்வெளியில் இருந்து விண்கல் மாதிரிகளை சேகரித்த கலம், ஞாயிறு காலை 10 மணி அளவில் பூமியை வந்தடையும் என நாசா அறிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு OSIRIS-REx திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, 2020 அக்டோபர் மாதத்தில், பெனு என்ற விண்கல்லில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதன் பிறகு, மாதிரிகள் அடங்கிய கலம் பூமியை நோக்கி பயணப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சுமார் 7 ஆண்டுகள் பயணம், ஞாயிறு அன்று நிறைவுறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்யேக பாராசூட் மூலம் பத்திரமாக விண்கல் மாதிரிகள் பூமியில் தரையிறக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், விண்வெளியில் விண்கல் மாதிரிகள் அடங்கிய கலம் பூமியை நோக்கி பயணித்து வரும் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.