நிலவின் தென் துருவத்தில் ஆக்ஸிஜன் குழாய்களை அமைக்கும் நாசா

November 18, 2024

சந்திரனின் தென் துருவத்தில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து, அதை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஒரு பெரிய பைப்லைன் திட்டத்தை ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் பகுதியாக நாசா செயல்படுத்துகிறது. L-SPoP எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் 5 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பைப்லைன் அமைக்கப்பட உள்ளது. இந்த பைப்லைன் மூலம் சந்திரனில் கிடைக்கும் அலுமினியம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து, அதை விண்வெளி வீரர்களின் உயிர்வாழ்வுக்குத் தேவையான ஆக்ஸிஜனாகவும், ராக்கெட் எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின் […]

சந்திரனின் தென் துருவத்தில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து, அதை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஒரு பெரிய பைப்லைன் திட்டத்தை ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் பகுதியாக நாசா செயல்படுத்துகிறது. L-SPoP எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் 5 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பைப்லைன் அமைக்கப்பட உள்ளது. இந்த பைப்லைன் மூலம் சந்திரனில் கிடைக்கும் அலுமினியம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து, அதை விண்வெளி வீரர்களின் உயிர்வாழ்வுக்குத் தேவையான ஆக்ஸிஜனாகவும், ராக்கெட் எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின் மூலம் சந்திரனில் நீண்ட காலமாக மனிதர்கள் வாழும் சூழலை உருவாக்க முடியும் என்று நாசா கருதுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10,000 கிலோ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் இலக்கை நாசா நிர்ணயித்துள்ளது. இதற்காக ஒரு மணி நேரத்திற்கு 2 கிலோ என்ற அளவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரோபோக்களைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் செலவைக் குறைத்து, பூமியைச் சார்ந்திருப்பதை குறைக்க முடியும். நாசா, நிகழாண்டுக்குள் ஆக்ஸிஜனை பிரித்தெடுக்க திட்டமிட்டுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டளவில் ஆர்ட்டெமிஸ் விண்வெளி வீரர்கள் இந்த ஆக்ஸிஜனை பயன்படுத்தத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu