சனி கிரகத்தின் டைட்டன் நிலவை ஆராய்ச்சி செய்ய டிராகன்ஃபிளை என்ற திட்டத்தை நாசா செயல்படுத்த இருந்தது. இந்த திட்டத்தை தற்போது ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
நாசா பல்வேறு விண்வெளி திட்டங்களில் பணியாற்றி வருகிறது. எனவே, நிதி பற்றாக்குறை காரணமாக, டிராகன்ஃபிளை விண்வெளி திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு திட்டம் தள்ளி வைக்கப்படலாம் என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் நிதி ஆண்டுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இந்த திட்டத்திற்கு போதிய நிதி தருவதாக இருக்கவில்லை; எனவே, திட்டத்தை 2027 ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக நாசா அறிவித்துள்ளது.