காட்டுக்குள் வேகமாக உருவான நகரம் - நாசா பகிர்ந்த செயற்கைக்கோள் புகைப்படம்

February 28, 2024

காட்டுக்கு நடுவே வேகமாக உருவாகி வரும் நகரம் குறித்த செயற்கைக்கோள் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவின் புதிய தலைநகரமாக நுஷாந்த்ரா உருவாக்கப்பட்டு வருகிறது. இது இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ காட்டு பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த நிலையில், இரண்டே ஆண்டுகளில் தலைநகரம் வேகமாக கட்டப்பட்டு வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வெளியாகியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது. இந்த நகரம் 2022 ல் கட்டமைக்கப்பட […]

காட்டுக்கு நடுவே வேகமாக உருவாகி வரும் நகரம் குறித்த செயற்கைக்கோள் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் புதிய தலைநகரமாக நுஷாந்த்ரா உருவாக்கப்பட்டு வருகிறது. இது இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ காட்டு பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த நிலையில், இரண்டே ஆண்டுகளில் தலைநகரம் வேகமாக கட்டப்பட்டு வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வெளியாகியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தையும், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது. இந்த நகரம் 2022 ல் கட்டமைக்கப்பட தொடங்கிய போது, 75% காடுகளை தக்கவைத்து உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நகரத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு 2045 ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu