பொதுவாக, பனிப்பாறைகள் ஒழுங்கற்ற முறையிலான வடிவத்தை கொண்டிருக்கும். ஆனால், தற்போது, அண்டார்டிகாவில் துல்லியமாக 90 டிகிரி வடிவமைப்பில் அமைந்துள்ள பனிப்பாறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் புகைப்படத்தை தற்போது நாசா வெளியிட்டுள்ளது.
பூமியின் துருவப் பகுதிகளில் உள்ள பனிசூழ்ந்த பகுதிகளை ஆராய்வதற்காக நாசா நீண்ட நாட்களாக குழு அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம், துருவப் பகுதிகளில் நாசாவின் விமானம் பறக்க விடப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளின் உயரம், ஆழம், தடிமன், அடுக்குகள் போன்றவை இதன் மூலம் ஆராயப்பட்டன. அப்போது, அண்டார்டிகாவின் லார்சன் சி பகுதியில், துல்லியமாக செவ்வக வடிவிலான பனிப்பாறை அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது மிக மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.