பூமியின் துருவங்களை செயற்கைக்கோள்களை செலுத்தி ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
மாறிவரும் காலநிலை குறித்தும் பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்யவும் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா முடிவு செய்துள்ளது. அதற்காக தனி ஆய்வகம் அமைத்து ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா துருவப் பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளது. இந்த திட்டத்திற்காக இரண்டு நவீன ரக செயற்கைக்கோள்களை இந்த மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்த முயற்சி செய்கிறது. அதனை துருவப் பகுதிகளின் மேல் உள்ள புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தி கண்காணிக்க உள்ளது. அதில் கிடைக்கும் தகவலை காலநிலை மற்றும் பணி மாதிரிகளை ஆராயும் வகையில் பயன்படுத்த உள்ளனர். இதன் மூலம் உலகின் கடல் நீர் மட்டம் உயர்வு, பனிக்கட்டிகள் உருகுதல் மற்றும் வானிலை மாற்றம் எத்தகைய விளைவுகளை அளிக்கும் என்று கணிக்க உள்ளனர்.