பார்க்கர் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 6.1 மில்லியன் கிமீ தூரத்திற்கு சென்றுள்ளது, இது மனித வரலாற்றில் இதுவரை எதுவும் எட்டாத நெருக்கமான தூரமாகும்.
நாசா 2018-ல் சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 'பார்க்கர் சோலார் புரோப்' விண்கலத்தை விண்ணில் அனுப்பியது. இது சூரியனின் வெப்பம், சூரிய புயல் மற்றும் சூரிய துகள்கள் பற்றி தகவல்களை சேகரிக்கும் நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்கலம் மணிக்கு 6,92,300 கிமீ வேகத்தில் பயணம் செய்து, மனிதன் அனுப்பிய மிக வேகமான பொருளாக சாதனை புரிந்தது. அதன் கவசம் 1,377 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, பார்க்கர் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 6.1 மில்லியன் கிமீ தூரத்திற்கு சென்றுள்ளது, இது மனித வரலாற்றில் இதுவரை எதுவும் எட்டாத நெருக்கமான தூரமாகும். தரவுகளை ஆய்வு செய்து வருவதாக நாசா அறிவித்துள்ளது.