7100 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பபுள் நெபுலா புகைப்படத்தை வெளியிட்ட நாசா

October 11, 2022

பூமியிலிருந்து 7100 ஒளி ஆண்டுகள் தொலைவில், பபுள் நெபுலா எனப்படும் குமிழ் மூடிய நெபுலா உள்ளது. அதன் பிரமிக்க வைக்கும் தோற்றத்தை, விண்வெளியில் உள்ள ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. அதனை, நாசா அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் உலகெங்கும் உள்ள வானியலாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகம் போன்ற அமைப்பு நெபுலா என்று அழைக்கப்படுகிறது. அதுவே, மற்றொரு மேகம் போன்ற அமைப்பால் […]

பூமியிலிருந்து 7100 ஒளி ஆண்டுகள் தொலைவில், பபுள் நெபுலா எனப்படும் குமிழ் மூடிய நெபுலா உள்ளது. அதன் பிரமிக்க வைக்கும் தோற்றத்தை, விண்வெளியில் உள்ள ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. அதனை, நாசா அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் உலகெங்கும் உள்ள வானியலாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகம் போன்ற அமைப்பு நெபுலா என்று அழைக்கப்படுகிறது. அதுவே, மற்றொரு மேகம் போன்ற அமைப்பால் மூடப்பட்டு, குமிழால் மூடப்பட்ட தோற்றத்தை உண்டாக்கினால், அது பபுள் நெபுலா எனப்படுகிறது. தற்போது, இதன் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. விண்மீ்ன்கள் கூட்டத்துக்குள், கண்கவரும் வகையில் வண்ணமயமாக நெபுலா காட்சியளிக்கும் இந்த புகைப்படம் விண்வெளியின் பிரமிப்பை அதிகரித்துள்ளது. இது குறித்து, “பபுள் நெபுலா தெளிவாக பார்க்கும் வகையில் உள்ளது. பச்சை நிறத்தில் ஹைட்ரஜன், நீல நிறத்தில் ஆக்ஸிஜன், சிவப்பு நிறத்தில் நைட்ரஜன் கலந்து வண்ண மயமாக உள்ளது” என்று நாசா கூறியுள்ளது.

அத்துடன், படம் பிடிக்கப்பட்ட பபுள் நெபுலா, 7 ஒளி ஆண்டுகள் சுற்றளவுக்கு மிக பிரம்மாண்டமாக அமைத்துள்ளது. எனவே, இந்த ராட்சத நெபுலா, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். சுமார் 40 லட்சம் ஆண்டுகள் பழமையான இந்த நெபுலா, அடுத்த 1 முதல் 2 கோடி ஆண்டுகளுக்குள் ‘சூப்பர்நோவா’வாக மாறிவிடும் என்று கருதப்படுகிறது. நெபுலாவில் உள்ள விண்மீன்கள் வெடித்துச் சிதறி, சூப்பர் நோவாவாக மாறும் தருணத்தில், சூரியனை போன்ற பல மடங்கு ஆற்றல் வெளிப்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu