கடலில் மூழ்கும் நியூயார்க் பகுதிகள் - நாசா அறிக்கை

September 29, 2023

நியூயார்க் நகரம் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது, நியூயார்க்கின் குறிப்பிட்ட சில பகுதிகள், மற்ற பகுதிகளை விட வேகமாக கடலுக்குள் மூழ்கி வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரின் மீது அதிக எடை கூட்டப்பட்டு வருவதால் அந்த நகரம் கடலுக்குள் மூழ்கி வருவதாக நாசா தெரிவித்திருந்தது. தற்போது, லா கார்டியா விமான நிலையம், ஆர்தர் ஆசே மைதானம், கோனே தீவு ஆகிய நியூயார்க் நகர பகுதிகள் முதற்கட்டமாக கடலில் மூழ்கும் […]

நியூயார்க் நகரம் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது, நியூயார்க்கின் குறிப்பிட்ட சில பகுதிகள், மற்ற பகுதிகளை விட வேகமாக கடலுக்குள் மூழ்கி வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரின் மீது அதிக எடை கூட்டப்பட்டு வருவதால் அந்த நகரம் கடலுக்குள் மூழ்கி வருவதாக நாசா தெரிவித்திருந்தது. தற்போது, லா கார்டியா விமான நிலையம், ஆர்தர் ஆசே மைதானம், கோனே தீவு ஆகிய நியூயார்க் நகர பகுதிகள் முதற்கட்டமாக கடலில் மூழ்கும் என நாசா கூறியுள்ளது. இந்த மூன்று பகுதிகளும், சராசரி அளவை விட வேகமாக கடலுக்குள் மூழ்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2016 முதல் 2023 ஆம் ஆண்டுக்குள், லா கார்டியா விமான நிலையம் 3.7 மில்லி மீட்டரும், ஆர்தர் ஆசே மைதானம் 4.6 மில்லி மீட்டரும் ஆண்டொன்றுக்கு மூழ்கி வருவதாக கூறியுள்ளது. நாசாவின் இந்த அறிக்கை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu