ஏலியன் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பறக்கும் தட்டுகள் குறித்து நாசா முக்கிய கருத்து

September 15, 2023

அண்மையில், மெக்சிகோ நாட்டில் 2 ஏலியன் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பறக்கும் தட்டுகள் குறித்த முக்கிய கருத்தை நாசா வெளியிட்டுள்ளது. ஏலியன் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நாசாவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாசா, பறக்கும் தட்டுகள் குறித்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. மேலும், இந்த துறைக்கு புதிய தலைவரை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரையில், உலகின் அனைத்து பகுதிகளிலும் பறக்கும் தட்டுகள் காணப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், […]

அண்மையில், மெக்சிகோ நாட்டில் 2 ஏலியன் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பறக்கும் தட்டுகள் குறித்த முக்கிய கருத்தை நாசா வெளியிட்டுள்ளது.
ஏலியன் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நாசாவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாசா, பறக்கும் தட்டுகள் குறித்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. மேலும், இந்த துறைக்கு புதிய தலைவரை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரையில், உலகின் அனைத்து பகுதிகளிலும் பறக்கும் தட்டுகள் காணப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவற்றை உறுதி செய்யும் படியான தெளிவான காட்சிகளாக அவை இல்லை. எனவே, நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் கொண்டு, பறக்கும் தட்டுகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அத்துடன், "ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகள், பறக்கும் தட்டுகள் மூலமாக வந்து செல்கிறார்களா என்பது குறித்த ஆதாரங்கள் முழுமையாக இல்லை. அதே வேளையில், வேற்று கிரகவாசிகள் இல்லை என்ற வாதத்தையும் உறுதியாக சொல்ல முடியாது. எனவே, ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்துகிறோம். ஆராய்ச்சியின் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படும்" என நாசா நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu