வரும் ஏப்ரல் 20 முதல் 22ஆம் தேதி வரை, நாசா சார்பாக ரோவர் சேலஞ்ச் 2023 நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், இந்தியா சார்பாக 11 குழுக்கள் பங்கேற்க உள்ளன. இவை உலகெங்கும் இருந்து பங்கேற்கும் 61 குழுக்கள் உடன் போட்டியிட உள்ளன. மேலும், 11 குழுக்களில், 3 குழுக்கள் உயர்நிலைப் பள்ளிக் குழுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதர குழுக்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சார்ந்தவை ஆகும்.
இந்த போட்டி நிகழ்வின்போது, குழுக்கள், தாங்களாகவே ரோவர்களை தயாரித்து, வடிவமைத்து, உருவாக்க வேண்டும். இவற்றை மனிதர்கள் இயக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். மேலும், அவற்றை இயக்குவதற்கான கருவிகளையும் வடிவமைத்து முடிக்க வேண்டும். நாசாவின் இந்த கடினமான போட்டியில், இந்தியாவை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது பெருமைமிகு தருணமாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த 11 குழுக்களில், 2 குழுக்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. அவை VIT கல்வி நிறுவனத்தின் வேலூர் மற்றும் சென்னை கிளைகளை சார்ந்தவை ஆகும்.