நாசாவின் மின்சார விமானம் நிகழாண்டில் அறிமுகமாகும் - அறிவிப்பு

February 3, 2023

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை பரிசோதனை முயற்சியில் தயாரித்துள்ளது. லித்தியம் பேட்டரி மூலம் இயங்கும் இந்த மின்சார விமானம், நிகழாண்டில் அறிமுகமாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த விமானம், ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் என கருதப்படுகிறது. எக்ஸ் 57 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார விமானம், இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றி அமைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இறக்கையில் 14 […]

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை பரிசோதனை முயற்சியில் தயாரித்துள்ளது. லித்தியம் பேட்டரி மூலம் இயங்கும் இந்த மின்சார விமானம், நிகழாண்டில் அறிமுகமாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த விமானம், ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் என கருதப்படுகிறது.

எக்ஸ் 57 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார விமானம், இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றி அமைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இறக்கையில் 14 புரொபல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த விமானத்தில் 4 பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விமானத்தின் இறக்கைகளை மடித்து விரித்துக் கொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் போன்ற எரிபொருளை பயன்படுத்தும் போது, எரிபொருள் தீர தீர விமானத்தின் எடை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பேட்டரியில் இருந்து கிடைக்கும் ஆற்றல், எடை மற்றும் அளவை பொறுத்து அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், லித்தியம் பேட்டரியில் இருந்து கிடைக்கும் ஆற்றல், சராசரி விமான எரிபொருள் மூலம் கிடைக்கும் ஆற்றலை விட 50 மடங்கு குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எடை கூடிய பேட்டரியில் தீப்பிடிக்க கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu