தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருக்கும் நாசாவின் SpaceX Crew-8 வீரர்கள் பூமி திரும்புவது தாமதமாகியுள்ளது. புளோரிடாவின் ஸ்பிளாஷ் டவுன் மண்டலங்களில் சமீபத்தில் தாக்கிய சூறாவளிகள் ஏற்படுத்திய கடுமையான சேதங்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, அக்டோபர் 21 அன்று விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. அதனால், கலத்தை பிரிக்கும் பணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் பிற்பகுதியில் வானிலை சீராகி பாதுகாப்பான தரையிறக்கம் மேற்கொள்ள முடியும் என்று நாசாவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.