விண்கற்களை ஆய்வு செய்வதற்காக, சைக் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் பூமிக்கு வீடியோ செய்தி ஒன்றை வெற்றிகரமாக அனுப்பி உள்ளது.
சைக் விண்கலத்தில் லேசர் தொலைத்தொடர்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பூமியிலிருந்து 19 மில்லியன் மைல்கள் தொலைவில் இருந்து பூமிக்கு வீடியோ செய்தி பகிரப்பட்டுள்ளது. சுமார் 15 வினாடிகள் ஓடக்கூடிய பூனை ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஹெச் டி தரத்தில் இந்த வீடியோ கிடைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பப்படும் போது, தொலைத்தொடர்பு சேவைகள் எளிமையாக அமையும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.