மே மாதத்தில் ஏற்படும் வானியல் நிகழ்வுகள் - விஞ்ஞானிகள் பகிர்வு

விண்ணில் ஏற்படும் அரிய வானியல் நிகழ்வுகளை பார்வையிடும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நிகழும் மே மாதத்தில் பரவசம் ஊட்டும் நிகழ்வுகள் காத்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள காணொளியில் மே மாத வானியல் நிகழ்வுகளை எப்படி பார்ப்பது என்பது குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் மே 3ம் தேதி காலையில் நிலவு, சனிக்கோள் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் வரிசையில் இருப்பதை காணலாம். அடுத்ததாக மே 23ம் தேதி வரும் பௌர்ணமி தினத்தன்று, சிவப்பு […]

விண்ணில் ஏற்படும் அரிய வானியல் நிகழ்வுகளை பார்வையிடும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, நிகழும் மே மாதத்தில் பரவசம் ஊட்டும் நிகழ்வுகள் காத்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள காணொளியில் மே மாத வானியல் நிகழ்வுகளை எப்படி பார்ப்பது என்பது குறித்த விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

வரும் மே 3ம் தேதி காலையில் நிலவு, சனிக்கோள் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் வரிசையில் இருப்பதை காணலாம். அடுத்ததாக மே 23ம் தேதி வரும் பௌர்ணமி தினத்தன்று, சிவப்பு நிற பிரகாசமான நட்சத்திரமான அண்டாரஸ் ஐ பார்க்க முடியும். மேலும், அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்த நிகழ்வின் போது கூடுதலான காட்சி இடம்பெறும். அதாவது, நிலவு முதலில் அண்டாரஸ் நட்சத்திரத்தை மறைக்கும். பின்பு வெளிப்படுத்தும். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஏற்படும் ஆக்குவாரிட் எரிச்சத்திர நிகழ்வு வரும் மே 5ம் தேதி உச்சக்கட்டத்தை அடையும். - இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu