இந்தியாவை கடந்து சென்ற சர்வதேச விண்வெளி நிலையம் - வீடியோ வெளியிட்ட நாசா

December 30, 2022

பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பூமியைச் சுற்றி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி, இந்திய நேரப்படி மதியம் 1:48 மணி அளவில், விண்வெளி மையம் இந்தியா பகுதியை கடந்து சென்றுள்ளது. அது கடக்கும் பொழுது பதிவு செய்யப்பட்ட வீடியோவை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. சுமார் 5.22 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ காட்சியில், இந்தியாவின் மும்பை, புனே, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு […]

பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பூமியைச் சுற்றி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 22ஆம் தேதி, இந்திய நேரப்படி மதியம் 1:48 மணி அளவில், விண்வெளி மையம் இந்தியா பகுதியை கடந்து சென்றுள்ளது. அது கடக்கும் பொழுது பதிவு செய்யப்பட்ட வீடியோவை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

சுமார் 5.22 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ காட்சியில், இந்தியாவின் மும்பை, புனே, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக தெளிவான வானம் இருந்ததால், இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. குஜராத் முதல் தமிழ்நாடு வரை சர்வதேச விண்வெளி நிலையத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தின், அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu